Monday, September 04, 2006

கௌசல்யாவின் கல்விக்கு உதவி வேண்டி

அன்பான வலைப்பதிவு நண்பர்களே,

இப்பதிவை சற்று சிரமம் எடுத்து முழுவதும் வாசிக்கும்படி, வாசகர்களாகிய உங்களுக்கு, முதலில் ஒரு வேண்டுகோள் !!!

சென்ற வருடம், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தன் பட்டப்படிப்பைத் தொடங்கிய கௌசல்யா என்ற ஏழை மாணவியின் கல்விக்கு உதவும் நோக்கத்துடன், என் பதிவு பிரமிக்க வைக்கும் கௌசல்யா வாயிலாக நான் வெளியிட்ட வேண்டுகோளின் தொடர்ச்சியாக, பல வலையுலக நண்பர்கள் பண உதவி செய்தனர். கிட்டத்தட்ட 30000-க்கும் மேலாக பணம் திரட்ட முடிந்தது.

கௌசல்யாவை சந்தித்துப் பேசுவதற்கும், அவருக்காக திரட்டிய தொகையை அவரிடம் வழங்குவதற்கும், கௌசல்யாவைப் பற்றி முதலில் செய்தி வெளியிட்டிருந்த டெக்கான் குரோனிகளின் செய்தி சேகரிப்புத் துறையின் தலைவர் திரு.பகவன் சிங் ஏற்பாடு செய்திருந்தார். அந்த சந்திப்பு பற்றிய என் பதிவு இது: 'சென்னைப் பெருமழையும் நெகிழ்ச்சியானதொரு சந்திப்பும்'.

அப்பதிவிலேயே, கௌசல்யாவின் மருத்துவப் படிப்பு முடியும் வரை, அவருடைய கல்விக்கு, நம்மால் இயன்ற உதவியை செய்வது குறித்து கோடிட்டு இருந்தேன். அதனால், நம் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பாக, மீண்டும் ஓர் உதவித்தொகையை திரட்டி, இம்மாணவியின் படிப்புச் செலவுக்கு தொடந்து வழங்கலாம் என்ற எண்ணத்துடன், பண உதவிக்கான இந்த வேண்டுகோளை, உங்கள் முன் மீண்டும் வைக்கிறேன். உங்களால் இயன்ற தொகையை (அது சிறியதாக இருந்தாலும்) உதவியாக அளிக்குமாறு உங்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். கல்விக்கான "பொது உதவி" நிதியாகவும் உங்களால் இயன்றதை வழங்கலாம்.

முதலில் கௌசல்யாவிடம், அவரது முதல் வருட மருத்துவப் படிப்பு குறித்தும், உடனடியாக சமாளிக்க வேண்டிய பிரச்சினைகள் பற்றியும் பேச இருக்கிறேன். கணிசமான ஒரு தொகை திரண்டவுடன், பகவன் சிங் அவர்கள் மூலம் கௌசல்யாவுடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்து, உதவிக் தொகையை (அவருக்கு சரியான வகையில் பயனளிக்கும் விதமாக) சேர்ப்பிப்பதற்கு நான் பொறுப்பெடுத்துக் கொள்கிறேன்.

சென்ற வருடம், பணம் தந்து உதவிய நண்பர்கள் அனைவருக்கும், இவ்விஷயத்தில் உறுதுணையாக இருந்த அருமை நண்பன் 'ரஜினி' ராம்கிக்கும், திரு.டோண்டு ராகவனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !!!

உதவிய நண்பர்கள் விவரம்:
'கடலோடி' பரணீ, ரம்யா நாகேஷ்வரன், ஜெயஸ்ரீ(US), முகமூடி, துளசி, சொ.சங்கரபாண்டி, திருமலை, சலாவுதின் பஷீர், 'டோண்டு' ராகவன், குழலி, ஈஸ்வர பிரசாத், மோகன் அண்ணாமலை, 'ரஜினி' ராம்கி, 'அரட்டை அரங்கம்' வீ.எம் மற்றும் பெயர் வெளியிட விரும்பாத ஓர் அன்பர்.


அனைத்து நண்பர்களுக்கும்:
****************************************
பண உதவி செய்ய விரும்பும், இந்தியாவிலிருக்கும் நண்பர்கள் / வெளிநாட்டிலிருந்து (ரூபாய்) காசோலையாக (அ) என் வங்கிக் கணக்குக்கு Direct credit செய்து உதவ விரும்பும் அன்பர்கள், தயவு செய்து கீழ்க்கண்ட மின்னஞ்சல்களுக்கு எழுதவும்.

balaji_ammu@yahoo.com
ramki@rajinifans.com
balaji.ammu@gmail.com
rajni_ramki@yahoo.com

இங்கே பின்னூட்டத்தில் உங்கள் மின்மடல் முகவரியை இட்டாலே போதும். நான் / ராம்கி உங்களுக்கு பணம் அனுப்புவதற்கான விவரங்களை (வங்கி சம்மந்தப்பட்ட மற்றும் எங்கள் முகவரி) தெளிவாக உங்களுக்கு தெரிவிக்கிறோம்.

**********************************

என்றென்றும் அன்புடன்,
பாலா

24 மறுமொழிகள்:

dondu(#11168674346665545885) said...

உங்கள் நல்ல எண்ணத்தின் பலத்தால் இம்முறையும் முயற்சி வெற்றியடையும் என்பதில் சந்தேகமில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

பாலாஜி

கவுசல்யாவின் பீஸ் மற்றும் படிப்புக்கான மொத்த செலவுகள் எவ்வளவு வரும்?

Santhosh said...

பாலா,
உங்க ICICI வங்கி கணக்கு எந்த கிளையில் உள்ளது என்று சொன்னிங்கன்னா NRI மக்களுக்கு Money2India மூலமாக அனுப்ப வசதியாக இருக்கும். Please try to keep this post active so that more people can know abt this(பின்னூட்ட கயமைத்தனம் செய்தாவது :)) )..

Sri Rangan said...

Hi Bala,

srirangan@t-online.de

regards

Sri Rangan

enRenRum-anbudan.BALA said...

Selvan,
//கவுசல்யாவின் பீஸ் மற்றும் படிப்புக்கான மொத்த செலவுகள் எவ்வளவு வரும்?
//
Around 50000, including her personal expenses.

சந்தோஷ், Mouls
Thanks. Pl. give your Email ID (or) write to my Yahoo ID

Sri rangan, Usha,
உங்களுக்கு தனி மடல் அனுப்புகிறேன், விரைவில்.

எ.அ.பாலா

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நல்ல முயற்சி தங்களுக்கு விவரங்கள் கேட்டு தனி மடல் அனுப்பி இருக்கிறேன். அதற்கு பதில் எதிர்பார்க்கிறேன்.

sathish (bengaluru) said...

Hello,

Congrats for your Great Work.

I wish to make donations. Please send me more information.


Desikan sir...Thanks for the information.

enRenRum-anbudan.BALA said...

Kumaran, Pulikutty Mohan,

Thanks ! Will send the details. Pl. clarify if you want to send a cheque or do a direct credit to my bank account.

CT,
Thanks ! Will send you the details for direct credit.

oorvashe,
Pl. provide your email ID.


என்றென்றும் அன்புடன்,
பாலா

said...

Nanbarey, Can I contribute some money after this month salary date?

enRenRum-anbudan.BALA said...

Anony friend,
Thanks, Pl. send an email to balaji_ammu@yahoo.com.

Are you in India or abroad ?

enRenRum anbudan
BALA

enRenRum-anbudan.BALA said...

உதவி பற்றி கேட்டு தனிமடல் அனுப்பிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. பதில் மடல் எழுதியுள்ளேன்.
--எ.அ.பாலா

Santhosh said...

தனி மடல் அனுப்பி இருக்கேன் பாலா... :)) எல்லோரும் சேர்ந்தால் 50K ஒரு பெரிய தொகையாக இருக்காது அப்படின்னு நினைக்கிறேன். முடிந்தால் அவரோட மற்ற வருட படிப்புக்கும் உதவும் வகையில் ஏற்பாடுகள் செய்வது நலம்.

enRenRum-anbudan.BALA said...

Santosh,
I responded to your Email :)
Thanks.

Hariharan # 03985177737685368452 said...

பாலா,

50000/- என்பது ஒரு ஆண்டுக்கான செலவுகளா?

நேரடியாக வங்கிக் கணக்குக்கு NRI-rupee draft அனுப்புவதற்கு விபரங்களை harimakesh@gmail.com அனுப்பவும்.

அன்புடன்,

ஹரிஹரன்

அறிஞர். அ said...

///great work!
Karunanidhi Government had a program where the top 3 rank-holders in each district were sponsored for higher education, completely by the government. Jayalalitha stopped it immediately after she came to power. My younger sister finished her engineering education in that scholarship, and we recieved all the money, amounting to around 1.5 lakhs without any trouble, without having to bribe anybody. It is sad that Jaya has stopped this. My sister had scored 1154/1200. She was third in Kancheepuram district. I am sure Kausalya would be a district rank-holder in her district too. I wonder if somebody in the media can pick up on this, and report it..and campaign Jaya's government to bring that program back.

Comment by Anonymous at 8:16 PM, October 16, 2005
///

I am just pasting the last year comment by an annonymous with in this blog.

How nice it is to bring/remind the authorities now.

--Mahir

enRenRum-anbudan.BALA said...

Hariharan,
I have mailed you the details

முகமூடி said...

இது ஒரு அவார்னஸ் பின்னூட்ட கயமைத்தனம்

ச.சங்கர் said...

பாலா,
வந்துட்டேன்...என்னையும் சேர்த்துக் கொள்ளவும்
போன முறையே விடுபட்டுப் போய் விட்டது...

அன்புடன்....ச.சங்கர்

said...

நல்ல முயற்சி...

said...

Visited the site for the first time even though know sujatha desikan for years.

will contribute for Kausalya ,give details.
Rangarajan

h.rangarajan@gmail.com

enRenRum-anbudan.BALA said...

Thanks, Rangarajan

I have sent a mail to you !

enRenRum-anbudan.BALA said...

Syam,

Pl. give your email ID for me to get in touch with you. You have not provided that in your comment in this posting !

said...

Bala,

I would like to be a part of this noble cause. My email Id is krishnan.prasad@gmail.com. Can you please forward the details to contribute?

Natrajan said...

Pl. send me your address to my id:
Since I have no internet account, can send Check/DD.
Tks
Natrajan
mnatrajan@aol.in

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails